ஜெயிலர் படத்தில் பவர்ஃபுல் வில்லனாக நடித்த விநாயகம் எத்தனை தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் தெரியுமா.!

Jailer vinayakan : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர்  இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியது அதுமட்டுமில்லாமல் 7 ஆயிரம் திரையரங்கிற்கு மேல் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது அதிலும் தமிழகத்தில் மட்டும் 1100 திரையரங்குகளில் ஜெயிலர்  திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, தமன்னா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த நிலையில் ஜெயிலர்  திரைப்படத்தில் பவர்ஃபுல் வில்லனாக நடித்திருக்கும் விநாயகன் எத்தனை தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதை இங்கே காணலாம்.

நடிகர் விநாயகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், இவர் நடிகனாக மாறுவதற்கு முன்பே நல்ல டான்ஸர் என்ற பெயரை எடுத்திருந்தவர் மெர்குரி என்ற நடன குழு ஒன்றை நடத்தி வந்தார். பின்னணி பாடகர் இசையமைப்பாளர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கிறார்.

இவர் முதன் முதலாக 1995 ஆம் ஆண்டு மாந்திரீகம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் கேமியோ ரோலில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் துணை வேடத்தில் நடித்திருந்தார் ஆனாலும் இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை வாய்ப்பு வரும்போது நடித்த கொள்ளலாம் என நடன குழு வேலையை பார்க்கலாம் என தன்னுடைய நடன குழு வேலையை பார்த்து வந்தார்.

அதன் பிறகு கம்மட்டி பாடம் என்ற படத்தில் கங்காவாக நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததால் தேசிய விருதும் பரிந்துரைக்கப்பட்டது அதன் பிறகு இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த விநாயகம் தமிழில் முதன்முதலாக விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு அடியாள்களாக நடித்திருந்தார்.

அப்பொழுது தன்னுடைய மிரட்டல் பேச்சால் விஷாலையே மிரட்டுவது போல் நடித்திருந்தால் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து சிலம்பாட்டம், காலா, சிறுத்தை என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். என்னதான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விநாயகனுக்கு பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் தனுஷின் மரியான் தான் இந்த திரைப்படத்தின் மூலம் விநாயகன் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தனது முழு வில்லத்தனத்தை வெளி காட்டியுள்ளார் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமோ அதற்கு சமமாக வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நெல்சன் இயக்கியுள்ளார் இந்த நிலையில் விநாயகன் காட்சிகள் திரையரங்கில் கைதட்டல் பறக்கிறது அந்த அளவு தன்னுடைய முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Leave a Comment