ajith-new-look

கோட் சூட்டில் மாசான லுக்கில் ஏர்போர்ட்டில் நடந்து சென்ற அஜித்.! வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

மேலும் இவர் நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் அதற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருவது மிகவும் வழக்கமாக இருந்து வருகிறது.  இறுதியாக இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் வலிமை திரைப்படத்திற்கு அடுத்ததாக வசூல் ரீதியாக விக்ரம் திரைப்படம் தான் வசூல் வேட்டையை பெற்று வருகிறது.

இதன் காரணமாக வலிமை சாதனைகளை விக்ரம் முரியடிக்குமோ என பல கேள்விகள் சோஷியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது நடிகர் அஜித் இயக்குனர் வினோதுடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார்.

இவர்களின் கூட்டணியில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் அதற்கான செட்டங்களும் போடப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் அஜீத்தை ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர்கள் கேக் வெட்டி வரவேற்ற வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்பொழுது அஜித் ஏர்போர்ட் வந்தபோது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.