ஆக்சன் காட்சியில் தவறிவிழுந்த அஜித்.. பிரமாண்ட பட்ஜெட் படம் டிராப் – வருத்தத்துடன் உண்மையை உடைக்கும் இயக்குனர்.

அண்மை காலமாக தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் சமூக அக்கரை உள்ள திரைப்படங்களை கொடுத்து வெற்றி மேல் வெற்றி அள்ளுவர் நடிகர் அஜித்குமார். ஆனால் சினிமா ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை தவற விட்டுள்ளார் அந்தவகையில் நடிகர் அஜித்குமார்.

காக்க காக்க, தூள், ஜெமினி என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த படங்களில் ஒன்று மகா திரைப்படமும் இருந்தது. அறிமுக இயக்குனர் ரவிராஜா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் மகா. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இந்தப் படத்தை உருவாக்கியது.  இந்த படம் ஒரு மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அப்போது எடுக்கப்பட்டது.

ஆக்ஷன் காட்சிகளுக்காக மிக பிரம்மாண்டமாக ஒரு கோடி ரூபாயில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இறுதிகட்ட படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பில் அஜித் சண்டை காட்சியில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டு 5 மாதம் சிகிச்சையில் இருந்தார். காயம் சரியாக பின் அதிலிருந்து மீண்டும் படத்தில் நடிக்க வந்தார்.

அந்த சமயத்தில் படத்தை தயாரித்தார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும், நடிகர் அஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் மகா படம் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லாமல் படம் பாதியிலேயே டிராப் ஆகி போனது. இதனை மிகுந்த வருத்தத்துடன் ரவிராஜா தெரிவித்தார்.

இந்த படத்திற்கு பிறகு ரவி ராஜா என்ற பெயரை மாற்றி நந்தா பெரியசாமி என மாற்றிக்கொண்டார் பின் ஒரு வழியாக கல்லூரி கதை என்னும் படத்தை இயக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment