தீபாவளிக்கு தல படம் வெளிவந்தாலும்..! கெத்து காட்டப்போவது உதயநிதி தான்..!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலித்துக் கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தினை இயக்குனர் வினோத் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படதினை தொடர்ந்து தல அஜித் தன்னுடைய 61வது திரைப்படத்தில் விறுவிறுபாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படகுழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.

இவ்வாறு அதற்கு தகுந்தார்போல் இந்த திரைப்படத்தின் புரொடக்ஷன் பணிகள் மற்றும் இதர பணிகளை மிக விறுவிறுப்பாக செய்துவருவது மட்டுமில்லாமல் நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவாகும் சர்தார் என்ற திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உதயநிதி முடிவு செய்துள்ளார்.

ஏற்கனவே தல அஜித் நடித்து வரும் தன்னுடைய 61வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உடன் உதயநிதி நல்ல நட்பில் இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த 61 திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை அவர் வாங்குவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ajith-01
ajith-01

இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களும் உதயநிதிக்கு சென்று விட்டால் இந்த இரண்டு திரைப்படத்தையும் தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்து விடுவார் ஆகையால் தீபாவளியில் அஜித் அல்லது கார்த்திக் இருவரில் யாருடைய படம் வந்தாலும் சரி உதயநிதி தான் ஹீரோ பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment