abarna

லிப் லாக் காட்சியில் பின்னி பெடலெடுக்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ “அபர்ணதி” வைரலாகும் வீடியோ.!

தமிழில் தொடர்ந்து தரமான படங்களை இயக்கி வெற்றி இயக்குனர் என்பதை தாண்டி எதார்த்தமான இயக்குனர் என பெயரெடத்தவர் வசந்தபாலன், இவர் தற்பொழுது ஜிவி பிரகாஷ் குமார்யை வைத்து ‘ஜெயில்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், ஏற்கனவே வசந்தபாலன் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு இசை அமைப்பதற்கு முதல் வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தவர்.

அதன்பிறகு தற்பொழுது ஹீரோவாக்கி அழகு பார்க்கிறார் 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகிய வெயில் திரைப்படம் மூலம் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார் அதன்பிறகு 14 வருடங்கள் கழித்து வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்துள்ளார்.

‘ஜெயில்’ திரைப்படம் ஊரடன்கிற்கு பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்து அவருக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்த தஞ்சாவூர் பெண்ணான அபர்ணதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து கடந்த 15ஆம் தேதி காத்தோடு காத்தாக என்ற பாடல் வெளியிடப்பட்டது, இந்த பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் இணைந்து பாடி இருந்தார்கள மனதை வருடிய இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்றது அந்த பாடலில் ஜிவி பிரகாஷ் அபர்னதி இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சில லிப் லாக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன, இந்த படத்தில் அபர்ணதி ஜிவி பிரகாஷ் உடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது, மனதை மயக்கும் இசையில் அழகான வரிகளில் காதலர்களின் கொஞ்சல் என வெளியாகிய இந்த பாடலை யூடியூபில் 3 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.