ஆர்யா மீது ஆசைப்பட்டு மோசமான அபர்னதியா இது.! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா.?

0
abarnathi
abarnathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நீண்ட ஆண்டுகள் நிலைத்து நிற்பவர் நடிகர் ஆர்யா. இவர் தற்போது விரும்மன் படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இப்படி தமிழில் ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு பெண் பார்க்க வேண்டும் என்று பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி இருந்தார் அப்போது ஆர்யாவுடன் ஜோடி சேர 18 பெண்கள் திருமண கோலத்தில் கலந்து கொண்டார்கள்.

கலந்து கொண்டது மட்டுமல்லாமல் ஆர்யாவை தன் பக்கம் ஈர்த்தார்கள் ஆனால் ஆர்யாவும் அவர்களெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகை சாய்ஷாவை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆர்யாவை நம்பி ஏமாந்தது 18 பெண்களில் ஒருவர் தான் தற்போது நடிகையில் ஒருவராக இருக்கும் நடிகை அபர்னதி. இவர் ஆர்யா மீது தீராத ஆசை கொண்டு இருக்கிறார் அது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய பெயருக்கு பக்கத்தில் 6ya என்ற பெயரை இன்னமும் மாற்றாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை அபர்னதி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது நடிகர் ஆர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டிருக்கிறார்கள் அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆர்யாவுடன் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தற்போது நடிகை அபர்னதி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ஜெயில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அபர்னதி தற்போது மார்டன் ஆடையில் மாறி இணையத்தையே நடுங்க வைத்திருக்கிறார் அந்த வகையில் ஜிம் ஒர்கவுட் செய்து கொண்டிருக்கும் நடிகை அபர்ணதியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

abarnathi
abarnathi
abarnathi
abarnathi
abarnathi
abarnathi