14 வருடங்களுக்கு முன்பு ஹிட்டடித்த சூர்யா பட பாடலை பிசிறு மாறாமல் பாடும் சூரரைப்போற்று நடிகை.! வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நீண்ட காலமாக ஹிட் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் ஏனென்றால் சமீபகாலமாக இவர் நடித்து வெளியாகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்படமாக அமையவில்லை அதனால் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இறுதிசுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காரோ இயக்கியுள்ளார் படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது  ஏனென்றால் சுதா கொங்கரோ திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் அவர் இயக்கத்தில் சூர்யா நடித்து இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது சூர்யா நடித்து ஹிட்டடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் பாடலை மேடையிலேயே பாடியுள்ளார்.

ஆம் 14 வருடங்களுக்கு முன்பு சூர்யா நடித்து ஹிட்டடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இருந்து முன்பே வா என் அன்பே வா என்ற பாடலை பிசுறு  மாறாமல் செம அழகாக பாடியுள்ளார் இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கல் மிகவும் வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.