lossliya-dharshan

தர்ஷனுடன் ‘பேபி நீ சுகர்’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட லாஸ்லியா.! அஸ்வின் எங்கே காணும் என்று கேட்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர் தற்போது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை பெண் தான் லாஸ்லியா.

இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.  இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில்  ஹர்பஜன்சிங்,அர்ஜுன், சதிஷ் நடித்த பிரெண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனுடன் இணைந்து கூகுள் கூட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.  அதோடு மட்டுமல்லாமல் லாஸ்லியாவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது.  இந்நிலையில் தற்பொழுது பேபி நி சுகர் பாடலுக்கு பிக்பாஸ் தர்ஷனுடன் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது மட்டுமல்லாமல் லைக்குகளையும் அள்ளிக் குவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

குட்டி பட்டாசு,அடிபொலி என ஏகப்பட்ட ஆல்பம் பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது.  நடிகை லாஸ்லியா அஸ்வினுடன் சேர்ந்து தான் தவறு என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் இந்த பாடல் யூடிபில் 10 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த கொண்டாட்டத்தை லாஸ்லியா தர்ஷனுடன் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாகத் தற்பொழுது ரசிகர்கள் ரீல் வீடியோவை பார்த்துவிட்டு லாஸ்லியாவிடம்  அஸ்வின் எங்கே என்று கேட்டு வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.