திருமணம் செய்து கொண்ட கவின்.! விரக்தியில் லாஸ்ட்லியா போட்ட பதிவு.!

Kavin Marriage photos : இளம் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் கவின் இவர் 2012 ஆம் ஆண்டு பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, நட்புன்னா என்னன்னு தெரியுமா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவர் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்டார் அதன் பிறகு ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 4, பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் சீசன் 6 என மூன்று சீசனிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பிறகு கவினுக்கு லிப்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வைரலானது இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு டாடா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு பிரேக் அப் செய்து விட்டார்கள்.

எங்கள் இரண்டு பேருக்கும் செட்டாகாது என வெளிப்படையாக பேட்டியில் லாஸ்லியா தெரிவித்து இருந்தார் இந்த நிலையில் கவின் அவருடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளத்தில் கவின் மற்றும் மோனிகா திருமண புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

kavin marriage photos
kavin marriage photos

அந்த பதிவில் “Can’t help but wonder” என கூறியுள்ளார் இவர் கவின் பற்றி தான் மறைமுகமாக இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kavin marriage photos
kavin marriage photos

Leave a Comment