நடிகரும் இயக்குனருமான சேரன் பொதுவாக வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். மேலும் இவருடைய இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறும் வகையில் அமையும் மேலும் முக்கியமாக இவருடைய திரைப்படங்களை பார்க்கும் அனைத்து ரசிகர்களையும் கண்ணீர் கடலில் மிதக்க வைத்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தின் நடித்திருக்கிறார். மேலும் வக்கீல் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ்ஏ ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு தமிழ் குடிமகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜாதி என்ற பெயரில் மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் மற்றும் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதனை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
அந்த வகையில் பிணங்களை எரிக்கும் வெட்டியானாக வேலை பார்க்கும் சேரன் கீழ் ஜாதி என்ற பெயரில் பல பிரச்சனைகளில் சிக்குகிறார். ஆதிதிராவிடர், பட்டியல் இனம் என்ன இந்த ஜாதிக்கு 9 பெயர் இருந்தாலும் கீழ் ஜாதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக சேரன் பல வசனங்களை பேசியுள்ளார்.
அதில் முக்கியமாக அவர் கூறுவதாக தனக்கான விடுதலையை தான் போராடி பெற வேண்டும் என சேர முடிவெடுக்கிறார் கடைசியில் தானும் விடுதலை பெற்றது மட்டுமல்லாமல் தன்னைச் சேர்ந்த மக்களுக்கும் விடுதலையை பற்றி தருகிறார் என்பதே இந்த தமிழ் குடிமகன் படத்தின் கதை தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இவ்வாறு இது போன்ற கதை அம்சமுடைய திரைப்படங்களை நடிகர் சேரன் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு தமிழ் குடிமகன் டீசர் பலரையும் உணர்ச்சிப் பட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதோ அந்த டீசர்..
https://youtu.be/gfpSbRacy1o