சேரன் எடுக்கும் அதிரடி முடிவு ஒருவேளை ஆட்டோகிராப் இரண்டாம் பாகமா.?

ஒரு சில முக்கிய திரைப்படங்களில் நடித்துவிட்டு தற்பொழுது ஆளே தலை காட்டாமல் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சேரன் இவரது இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆட்டோகிராப் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை கொண்டாடியது.

மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் நான்கு தேசிய விருதுகளையும் மற்றும் ஆறு தமிழக அரசின் விருதுகளையும் பெற்றது.இதை தொடர்ந்து பார்த்தால் ஆட்டோகிராப் திரைப்படத்தில் நடித்த சினேகா, கோபிகா,கனிகா போன்ற பல பிரபலங்கள் மிகவும் உச்ச நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கி வந்தார்கள்.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகர் சேரன் நடிப்பை ரசிகர்களால் தற்பொழுது வரை மறக்க முடியாது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இந்தத் திரைப்படத்தை இயக்கி அட்டகாசமாக நடித்திருப்பார்.இதை தொடர்ந்து பார்த்தால் இந்த ஆட்டோகிராப் திரைப்படத்தை கன்னடத்தில் இயக்க சேரன் அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்.

என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதாவது கன்னடத்தில் இயக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சுதீப் அவர்கள் தான் நடிக்க உள்ளதாகவும் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

cheran
cheran

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இதனை பற்றி அதிகார பூர்வ தகவல் வெளிவருமா என பலவிதமான கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இந்த திரைப்படத்தில் கன்னடத்தில் எடுத்தால் நன்றாக தான் இருக்கும் எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment