surya42

‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் உடன் கூடிய டீசரை வெளியிட்ட படக் குழு.! இது ரஜினி படம் டைட்டிலா.?

சிறுத்தை சிவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூரியா 42 படத்தின் தலைப்பு குறித்து படகுழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது .அதாவது சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு சூரியன் 42 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டது.

பல மாதங்களாக படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தும் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தனர். இந்நிலையில் இந்த படத்தில்  சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பவானி நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து மிகவும் பிரமாண்டமாக பல கோடி பொருட்செளவில் உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 3டி தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படம் மொத்தம் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கும் நிலையில் சூர்யா இந்த படத்திற்காக 13 கெட்டப்புகளில் நடித்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிலையில் சூரியன் 42 படத்தின் தலைப்பை படக்குழு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கங்குவா என பெயரிடப்பட்டு இருக்கும் நிலையில் இதற்கு முன்பு இதே பெயரில் ரஜினியின் படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 1984ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் உருவான இந்தி படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது மலையூர் மம்மட்டியான் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும்.

surya 42
surya 42

இந்நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசரை பட குழு வெளியிட்டு இருக்கும் நிலையில் இந்த டீசரின் இறுதியில் இப்படம் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.