கங்குவா’ படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கு தெரியுமா.? வெளியான சூபர் தகவல்

ஃபேமிலி என்டர்டெய்னர் படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு பீரியடிக் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என சமீபத்தில் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், ‘கங்குவா’ அடுத்த ஷெட்யூல் கேரளாவில் தொடங்கியுள்ளது. சென்னையில் கடைசி ஷெட்யூலை முடித்துவிட்டு, ‘சில காலம் படக்குழு ஓய்வில் இருந்தனர்.

ஆனால் தற்போது படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை கேரளாவில் தொடங்கி உள்ளது. அந்த வகையில் கங்குவா படபிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. படக்குழு குறிப்பிட்ட தேதியில் படபிடிப்பை முழுமையாக படபிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் சில முக்கிய பிரபலங்கள் கங்குவா படப்பிடிப்பில் சேர இருக்கிறார்கள் என்று கூறபடுகிறது.

‘கங்குவா’ திரைப்படம் 1500 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் படம், மேலும் ‘கங்குவா’ டைட்டில் டீசரில் சூர்யாவின் அனிமேஷன் கதாபாத்திரத்துடன் காணப்படும் நாய், குதிரை மற்றும் கழுகு ஆகியவை படத்தின் கதையுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன. மேலும் நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக பெரிய பட்ஜெட் திரைப்படம் என்றால் அது கங்குவாதான்.

‘கங்குவா’ திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் படம் 2டி மற்றும் 3டியில் 10 மொழிகளில் வெளியிடப்படும் என கூறபடுகிறது. ‘கங்குவா’ படத்தில் சூர்யா பல தோற்றங்களில் காணப்படுவார் என்றும் கூறபடுகிறது, இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், இது அவரது தமிழ் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

மேலும் கங்குவா படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கங்குவா படத்தை முடித்து விட்டு நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கம் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக நம்பபடுகிறது.

Leave a Comment