லியோவுக்கு போட்டியாக அப்டேட்டுகளை அள்ளி குவிக்கும் சூர்யா 42 படகுழு.! இணையத்தில் வைரலாகும் அடுத்த அப்டேட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுபாக  நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் 3d தொழில்நுட்ப முறையில் உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து சூர்யாவின் சினிமா வரலாற்றில் சூர்யா 42 திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இதனை தொடர்ந்து தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் இருந்து அடுத்த அடுத்த அப்டேடுகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த வகையில் சமீபத்தில் சூர்யா 42 திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக கூராடுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா 42 திரைப்படத்தின் ஒரு புதிய அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதாவது சூர்யா 42 திரைப்படத்தில் புதிய அப்டேட் ஒன்று வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

அந்த அப்டேட் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் பிரமோ வீடியோவை போல சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் ஒரு பிரமோ வீடியோவாக தான் வெளியாகும் என்று ஏற்கனவே சில தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்திற்கு போட்டியாக சூர்யா 42 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நாளை வெளியாகும் அப்டேட் குறித்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த அப்டேட் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த அப்டேட்.

 

Leave a Comment