சூர்யா 42 படத்தின் அப்டேட் இந்த தேதியில்தான் வெளியாகிறது.! வெளியான சூப்பர் தகவல்…

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த தேதியில் தான் வெளியாகும் என தற்போது ஒரு தகவல் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா உடன் இணைந்து தனது 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகும் நிலையில் இந்த படத்தில் மட்டும் நடிகர் சூர்யா பல கெட்டப்புகளில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து இந்தத் திரைப்படம் 3d தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோ வீடியோ வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு முன்பு நடிகர் சூர்யா அவர்கள் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் அப்போது பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சூர்யா வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறினார்.

வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறிய உடனே நடிகர் சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கம் தனது 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்த நிலையில் மீதி காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment