தற்போதெல்லாம் அனைத்து தொலைக்காட்சிகளும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். பொதுவாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஏராளமானோர் தற்பொழுது திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
என்னதான் ரசிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்கு நெகட்டிவ் பெயர் கிடைத்தாலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் தான் உள்ளது. இதன் காரணமாக பிரபலமடைய முடியாமலும், சினிமாவிற்கு அறிமுகமாகும் இளம் நடிகர் நடிகைகளுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
இந்நிகழ்ச்சி தமிழ்,ஹிந்தி உள்ளிட்ட இன்னும் பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் அக்டோபர் 3ஆம் தேதியன்று பிக்பாஸ் சீசன் 5 மாலை 6 மணி அளவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சினேகன்.
இவர் ஒரு கவிஞர் ஆவார் இந்நிகழ்ச்சியில் அதனை பயன்படுத்திக் கொண்டு அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இவர் சில திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பாடல் பாடுவது என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கன்னிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்பொழுது சினேகன் தனது அன்பு மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட மிகவும் வைரலாகி வருகிறது.