இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன் மற்றும் கன்னிகா.! பரிசு கொடுத்து அசத்திய இசைஞானி என்னது தெரியுமா.?

வெள்ளித்திரையில் ஹீரோவாகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றி மக்களை மகிழ்வித்தவர் சினேகன். சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை இவர் பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அது அவருக்கு  கிடைக்காமல் போனது இருப்பினும் வெளியே வந்த அவருக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்து அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள உலகநாயகன் கமலஹாசன் சினிமாவையும் தாண்டி மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் தலைவராக இருந்ததால் அந்தக் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்டார்.

இதனால் சினேகாவின் சினிமா அரசியல் என ரெண்டிலும்  வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் நீண்ட வருடங்களாக  கன்னிகாவை காதலித்து வந்த  இவர் திடீரென திருமணம் செய்துகொண்டனர் இவர்கள் திருமணம் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது ஏன் உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் தான் இவர் தாலி கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஆசையை காதலியை திருமணம் செய்து கொண்டதால் அவரது பெயரை தன் கையில் பச்சை குத்திக்கொண்டார் சினேகன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவியது. இப்படி இருந்த நிலையில் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இசைஞானி இளையராஜா திடீரென சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகாவை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

மேலும் அவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு ஒன்று கொடுத்துள்ளாராம்.  இளையராஜா சினேகாவுக்கு  மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

snekan and ilayaraja
snekan and ilayaraja

Leave a Comment