பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா.? வெளியான தகவல்

0
bigboss
bigboss

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் இல் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் வரை முடிவடைந்த நிலையில் அந்த ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட சில முக்கிய போட்டியாளர்களான 14 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சிறப்பாக பயணித்து வருகின்றன. பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் வாரம் எவிக்ஷன் நடைபெறாது என்று நினைத்திருந்த நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி முதல் போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

மேலும் சென்ற வாரம் அவரைத் தொடர்ந்து சுஜாவருணி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் போன் கால் ஒன்று வந்தது அந்தக் காலை பாலா அட்டன்ட் செய்தார். பாலாவிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள்  அனைவரும் சுவாரஸ்யமாக விளையாடுவது போல் தெரியவில்லை அதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் பாலா போட்டியாளர்களிடம் வந்து நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி யாரையாவது ஒருவரை தேர்வு செய்து இந்த வாரம் நேரடியாக எலிமினேட் செய்யலாம் என கூறினார் அதனை நம்பி போட்டியாளர்கள் பலரும் ஒருவரை  தேர்வு செய்துள்ளனர். பின்பு பாலா நான் சும்மா பிராங்க் செய்தேன் என காமெடியாக கூறி உள்ளார். அதனால் போட்டியாளர்கள் பலரும் பாலாவிடம் கோபம் அடைந்தனர்.

இப்படி சுவாரசியமாக நிகழ்ச்சி நடைபெற்று இருக்கும் நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆன நபர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று அபிநய் கடைசி இடத்தில் உள்ளார் மேலும் அவரை தொடர்ந்து அவருக்கு முன் இடத்தில் சினேகன் இருக்கின்றார். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்ற பேச்சு அடிபட்டு வருவதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அபிநய் மற்றும் சினேகன் இருவரும் வெளியேறுவார்களா அல்லது ஒருவர் வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.