தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் முழு திரை படத்தில் காமெடியனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
யோகி பாபு அவர்களுக்கு அவரின் தலைமுடியும் பாடி லாங்குவேஜ் தான் அழகு. அதற்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் யோகி பாபு தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.
யோகி பாபு நடிப்பில் வெளியாகிய தர்ம பிரபு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து தற்போது யோகி பாபு நடிப்பில் மண்டேலா திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை அஸ்வின் என்பவர் இயக்குகிறார் அதுமட்டுமில்லாமல் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷங்கர். படத்தில் யோகிபாபு, சங்கிலி முருகன், ஜி எம் சுந்தர், ஷீலா ராஜ்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.
படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் விஸ்பரி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.