பார்க்கத்தான் காமெடி பீஸ் ஆனால் “நட்புக்காக” சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகிபாபு. படக்குழு நெகிழ்ச்சி.

0

திரை உலகில் இருக்கும் நடிகர்கள் பலருக்கு சினிமாவில் வட்டாரத்திலேயே உதவி செய்து வருகின்றனர் ஒரு சிலர் அதையும் தாண்டி சக மனிதர்களுக்கும் ரசிகர்களுக்கும் உதவி செய்கின்றனர் அந்தவகையில் ஒரு காமெடியனாக இருந்துகொண்டு தற்பொழுது தன்னால் முடிந்தவற்றை மக்களுக்கும் அதே துறையைச் சார்ந்த சினிமா நண்பர்களுக்கும் செய்து வருகிறார் காமெடி நடிகர் யோகிபாபு.

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் படங்களின் காமெடியில் நிச்சயம் அந்த  கதை களத்திற்கு முதலில் அழைக்கப்படும் ஒரு யோகி பாபு தனது எதார்த்தமான காமெடியை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை தற்போது வளைத்துப் போட்டுவார் இதனாலையே இவர் அஜித் விஜய் போன்ற பெரும்பாலான நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் மேலும் அதை தவிர 10 படங்களுக்கு மேலாக தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். ஒரு நடிகர் கூட இவ்வளவு படங்கள் கையில் வைத்திருப்பது என்பது சந்தேகம் அந்த அளவிற்கு தற்போது பிஸியாக நடித்து வரும் நபராக மாறியுள்ளார் யோகிபாபு.

இப்படியிருக்க தனது நண்பரின் படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

“நாயே பேயே” என்ற திரைப்படத்திற்காக நடிகர் யோகிபாபு போகி நடிக்க என அழைத்துள்ளனர் ஆனால் அவர் தொடர் படங்களில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருப்பினும் இந்த படத்தின் விளம்பர பாடலுக்கு நடித்துக் கொடுத்துள்ளார்.

அதற்காக அவர் சம்பளம் வாங்காமல் நட்புக்காக இதை செய்து கொடுத்தார் இதனை படக்குழு சந்தோஷத்துடன் கூறியது “நாயே பேயே” திரைப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஐஸ்வர்யா, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். “நாயே பேயே” திரைப்படத்தை சக்தி வாசன் இயக்குகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தை தனிஒருவன், தில்லுக்குதுட்டு உட்பட பல படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபிகிருஷ்ணா என்பவர் தயாரித்துள்ளார். இந்தப் படம் நிச்சயம் மக்களை மகிழ்விக்கும் என கூறப்படுகிறது. வருகின்ற 23 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.