அஜித் என்னை பார்த்தால் முதலில் கேட்கும் விஷயம் இதுதான்.! மனம்திறந்து பேசிய யோகிபாபு.

0

திரை உலகில் காமெடியில் அசத்திய பல ஜாம்பவான்கள் தற்போது திரையுலகம் பக்கம் அடி எடுத்து வைத்தால் புதுமுக காமெடி நடிகர்கள் பலரும் தற்போது வெகு விரைவிலேயே முன்னணி நடிகரின் பட வாய்ப்பை கைப்பற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து சிறப்பாக வருகின்றனர்.

அந்த வகையில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு. பின் திரையுலகில் காமெடியனாக மிகப்பெரிய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் நடிகர் யோகிபாபு இவர் டாப் நடிகர்களின் படங்களில் நிச்சயம் இருப்பார் அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இயக்குனர்களும் நடிகர்களும் யோகி பாபுவை படத்தில்  கமீட்டாக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினி விஜய் அஜித் போன்ற டாப் நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில்  வலிமை படத்தில் தற்போது அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் மேலும் அண்ணாத்த படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர் கூறியது.

அஜித்துடன் இதுவரை 4 படங்களில் நடித்துவிட்டேன். எனக்கு அவருடன் நடிப்பது மிகுந்த சந்தோஷம்  சூட்டிங் ஸ்பாட்டில் என்னிடம் அவர் அடிக்கடி பேசுவது இன்னும் ஏன் கல்யாணம் பண்ணாமல் இருக்க என் பொண்ணு பார்க்கலையா என அடிக்கடி கேட்பார்.நான் பொண்ணு பார்க்குறேன் அந்த பொண்ணு தான் என்ன பார்க்க மாட்டேங்குது என விளையாட்டுத்தனமாக அஜித்திடம் சொல்லுவேன்.

அதுக்கு அவர் நிச்சயம் உனக்கு கல்யாணம் ஆகும் பார் என சொன்னார்.  அவர் சொன்னது போலவே எனக்கு கல்யாணம் ஆகியது. வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது என்னை பார்த்த சந்தோஷத்தில் கட்டிப்பிடித்து.

உனக்கு குடும்பம் தான் முக்கியம் என கூறி நிறைய அட்வைஸ் சொன்னார் அது என் வாழ்நாளில் மிகப்பெரிய ஒன்றாக எடுத்துக் கொண்டு என் வாழ்க்கையில் பயணிப்பேன் என் யோகிபாபு கூறி உள்ளார்.