நடிகர் அஜித்தின் மச்சினிச்சியும் ஷாலினி அஜித்தின் சகோதரியுமான ஷாமிலி வித்தியாசமான லுக்கில் இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகளில் ஒருவர் தான் ஷாமிலி தன்னுடைய மூன்று வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களிலும் இவருடைய நடிப்பு பெரிதளவிலும் பாராட்டப்பட்டது.
அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது இதனை அடுத்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார்.
பிறகு படிப்பிற்காக திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டார் படித்து முடித்தவுடன் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்த நிலையில் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை எனவே தற்போது இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இதன் காரணமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இவருக்கு லட்சக்கணக்கான ஃப்லோசர்கள் இருந்து வருகிறார்கள் மேலும் சமீப காலங்களாக ஷாலினி தங்கை ஷாமிலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் ஆயிரம் கணக்கானோர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான லோக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஹேர் கலரிங் செய்து கொண்டு மாடனுடையில் சாலை ஓரமாக நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலியா இது இப்படி மாறிவிட்டாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.