ரெண்டு ஜிலேபியும் பட்ட ஜிலேபியா இருக்கு பாஸ்.! ஷாலினியை தூக்கி சாப்பிடும் அஜித்தின் மச்சினிச்சி..

Actress shalini and Shamlee photos: நடிகை ஷாமிலி தனது அக்கா ஷாலினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பகிர சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான ஷாமிலி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். ஒரு கட்டத்தில் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே தற்போது பெரிதாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் ஷாமிலி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். நடிகை ஷாமிலி அஞ்சலி, தைப்பூசம் போன்ற படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார். இவருடைய அழகான சிரிப்பு, வசீகரமான முகம் போன்றவை மனதில் நீங்கா இடம் பிடித்தது.

முக்கியமாக மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தில் மாற்று திறனாளி குழந்தை ஆக நடித்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். இதனை அடுத்து இயக்குனர் ராமநாராயணன் இயக்கிய பல சாமி படத்தில் அனைவரையும் தெய்வக் குழந்தையாகவே கவர்ந்தார்.

Actress shalini and Shamlee photos
Actress shalini and Shamlee photos

பிறகு துர்கா படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் டஃப் செய்யப்பட்டடு வெளியானது. இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த ஷாமிலி ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க தொடர்ந்தார் ஆனால் இந்த படம் சொல்லும் அளவிற்கு பெரிதாக வெற்றினை தரவில்லை.

Actress shalini and Shamlee photos
Actress shalini and Shamlee photos

எனவே ஓவியத்துரையில் மேதையான ஏவி இளங்கோவின் வழிகாட்டுதலுடன் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் வரைந்த ஓவியங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது ஷாமிலி தனது அக்கா ஷாலினியுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் ஏராளமான கமெண்டுகளையும், லைக்களையும் குவித்து வருகின்றனர்.