ajith-shalini-tamil360newz

தனியார் மருத்துவமனைக்கு மனைவியுடன் வந்த தல அஜித்.!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

Thala Ajith arrives at hospital with wife The video is viral on the website:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் அமர்க்களம், வாலி, முகவரி, காதல் கோட்டை, காதல் மன்னன், தீனா, மங்காத்தா, பில்லா, விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தீனா படத்தின் மூலம் ரசிகர்கள் அஜித்தை தல என செல்லமாக அழைத்து வந்தனர்.

தற்போது இவர் போனிகபூர் தயாரிக்கும் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கி வருகிறார். மேலும் இந்த  திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தல அஜித் பொதுவாக வெளியிடங்களுக்கு அதிகமாக செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதில்லை. இவர் இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி இருக்கும் நிலையில் தற்போது இவர் பிரபல தனியார் மருத்துவமனைக்கு தனது மனைவி ஷாலினியுடன் வந்து சென்றுள்ளார். இவர் இந்த மருத்துவமனைக்கு யாரை பார்க்க வந்தார், எதற்காக வந்தார் என்ற எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இவர் மருத்துவமனைக்கு வந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

 

shalini-with-ajith

பேட்மிட்டன் விளையாட்டில் மாஸ் காட்டும் ஷாலினி.! வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் சினிமாவின் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் இதனையடுத்து அவர் தமிழில் அஜீத், விஜய், மாதவன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் ஷாலினி அவர்கள் சேர்ந்து நடித்தனர் இப்படத்தில் இருவரும் காதல் வயப்பட்டனர் இதனையடுத்து அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஷாலினி அவர்கள் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திக்கொண்டார்.

திருமணமான பெண்கள் திருமணம் முடிந்த கையோடு வீட்டிலேயே முடங்குவது வழக்கம் ஆனால் அஜித் அவர்கள் தனது மனைவிக்கு முழு உரிமை கொடுத்துள்ளார்  அவரது விருப்பத்திற்கு ஏற்றார்போல் இருந்து வருகிறார் ஷாலினி.ஷாலினி. அவர்களுக்கு  இறகுபந்து மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார்

இந்த நிலையில் தற்போது ஷாலினி அவர்கள் இறகுபந்து போட்டியில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார் நாம் அறிந்ததே. அந்தவகையில் தற்போது போட்டி ஒன்றில் அவர் விளையாடும் பழைய வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் அத்தகைய வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.