mahalakshmi

கோலாகலமாக நடந்த மகாலட்சுமி வீட்டு விசேஷம்.! நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட ரவீந்தர்..

வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கி விடுகிறது. இவர்களை நாள்தோறும் தொடர்ந்து பார்ப்பதனாலோ என்னவோ இவர்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு மவுசு உருவாகி விடுகிறது. அந்த வகையில் நடிகைகளும் இதனை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அப்படி சோசியல் மீடியாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர் பல ஆண்டுகளாக பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் இதன் மூலம் இவர்கள் பற்றிய ஏராளமான சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வைரலாக இருவரும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் அளித்த பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் ஆகியவை சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் தற்பொழுது இவர்கள்  திருமணமாகி 100வது நாள் கொண்டாட்டத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்ய அந்த புகைப்படங்கள் குவிந்து வருகிறது.

அதாவது தயாரிப்பாளர் ரவீந்திரன் வீட்டில் சண்டி ஹோமம் நடத்தப்பட்டது அந்த ஹோமத்தின் காட்சிகளையும் அதில் மகாலட்சுமி கலந்துகொண்டதையும் ரவீந்திரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஹோம் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் மற்றும் அன்பு வைத்து உள்ளவர்களுக்காக நடத்தப்பட்டதாகவும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ததாகவும் ரவிந்தர் கூறியுள்ளார். மேலும் அனைவருடைய கனவும் விரைவில் நிறைவடைந்து உண்மையாக மாறும் ஃபிரண்ட்ஸ் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..