ரவீந்தரை திருமணம் செய்துக் கொண்ட மகாலட்சுமியின் மகனா இவர்.. வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படம்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை சின்னத்திரை நடிகை மகாலட்சுமி திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது அவருடைய மகன் சச்சின் உடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கிய மகாலட்சுமி பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

இந்த சீரியல்கள் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தர திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றார். அந்த வகையில் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் வெள்ளித்திரையில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னதிரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

தொடர்ந்து ஹீரோயினாகவும், வில்லியாகவும் நடித்து வரும் மகாலட்சுமி ஏற்கனவே அனில் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினர்களுக்கு சச்சின் என்ற மகன் ஒருவர் இருக்கிறார் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அனிலை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இதற்கு முன்பே மகாலட்சுமியின் முதல் கணவர் சேர்ந்து வாழ வேண்டும் என பலமுறை தெரிவித்த பொழுதும் அதனை மகாலட்சுமி வேண்டாம் என நிராகரித்து விட்டாராம். இப்படிப்பட்ட நிலையில் தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் நடைபெற்றது.

இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பலரும் பலவிதமான சர்ச்சை கூறிய கமெண்டுகளை பதிவிட்டு வந்தார்கள்.  எனவே துணிச்சலுடன் இவர்கள் தொடர்ந்து அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றரை வருடம் காதலித்து பிறகு தான் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய மகாலட்சுமி தனது மகன் சச்சின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா என கூறி வருகின்றனர். மேலும் அவருடைய மகன் அவரைப் போலவே குண்டாக கொழு கொழுவென இருக்கிறார். இதோ அவருடைய புகைப்படங்கள்..

mahalakshmi
mahalakshmi

Leave a Comment