விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு இந்த நிகழ்ச்சிகள் இந்த அளவிற்கு ரீச் அடைவதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளர்கள்தான் பொதுவாக விஜய் டிவி தொகுப்பாளர்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடத்தை உருவாக்கி விடுகிறார்கள்.
அப்படி கலகலப்பாக அனைத்து நிகழ்ச்சிகளையும் கொண்டு செல்பவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் மாகாபா உடன் இணைந்து தற்பொழுது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு இதனைத் தொடர்ந்து சோலோவாக தன்னுடைய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது ஸ்டார்ட் மியூசிக் 4 நிகழ்ச்சி தொடர்ந்து ஏராளமான பிரபலங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிரியங்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்நிகழ்ச்சியில் தற்பொழுது ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது ஸ்டார்ட் மியூசிக் செட்டில் இருந்து தொகுப்பாளின் பிரியங்காவை கடத்தி விட்டதாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு இந்நிகழ்ச்சிக்காக இப்படி ஒரு ப்ரோமோவை தயார் செய்து வெளியிட்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் படும் வைரலாகி வருகிறது. இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் நிலையில் அப்படி எப்படிப்பட்ட நட்சத்திரங்கள் இந்த வார போட்டியாளர்களாக களம் இறக்க இருக்கிறார்கள் என்பதினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து வருகின்றனர்.
ஆனால் இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கலாட்டா செய்யும் பிரபலங்களாக இருக்கப் போகின்றனர் எனவே இந்த வாரம் சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இதோ அந்த வீடியோ..