மாலத்தீவில் குட்டையான உடையில் ஓடி விளையாடும் விஜே பிரியங்கா.! வெளிநாட்டில் கவர்ச்சி லேடியா என கிண்டல் செய்யும்..

vj-priyanga-1
vj-priyanga-1

பல சின்ன சின்ன சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில் இதன் மூலம் தன்னுடைய பேச்சுத் திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் சிறந்த தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜே ப்ரியங்கா.

இவர் சுட்டி டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார் இதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவியில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறிது காலம் கழித்து தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார். இதனை அடுத்து இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இதனால் சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட நிலையில் மறுபடியும் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வேலையை தொடங்கினார்.

எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் காமெடி, தன்னுடைய குறும்புத்தனத்தை வெளிப்படுத்தி கலகலப்பாக கொண்டு சென்ற நிலையில் விஜய் டிவியின் ஒரு அங்கமாக பிரியங்கா விளங்குகிறார். மேலும் பிரியங்கா, மாகாபா இவர்களுடைய காம்போ மிகவும் அருமையாக இருந்து வருவதால் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவு ட்ரிப் சென்று இருக்கிறார்.

vj priyanga
vj priyanga

அங்கு இருக்கும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தற்போது குட்டையான உடையில் கடற்கரையில் ஓடி விளையாடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் குடும்ப குத்து விளக்கு வெளிநாட்டில் கவர்ச்சி லேடியா என கிண்டல் செய்து வருகின்றனர்.