நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன் உங்களுக்கு… கண்ணீரில் மிதக்கும் விஜய் டிவி பிரியங்கா.!

0

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா இவர் சமூக வலைதளத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன் நீங்கள் ஏன் இவ்வளவு என் மேல் அன்பை காட்டுகிறீர்கள் என்று கண்கலங்கி மிகவும் எமோஷனலாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் சில சின்ன தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு 2015ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிய தொடங்கினார் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் பங்கு பெற்றுத் தோட்டிய எங்கும் பிரபலமடைந்தார். மேலும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் மலேசியா சென்று இருந்த பொழுது அந்த நாட்டு மக்கள் அளித்த அன்பு அவரை கண்கலங்க வைத்துள்ளது.

அது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் மலேசியா மக்கள் காட்டிய அன்பால் மகிழ்ந்து போனேன் அவர்களுக்கு நான் என்ன செய்தேன் எதற்காக அவர்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்நிலையில் எனக்கு முழு அளவில ஆதரவு கொடுத்து மலேசியா மக்கள்தான் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்னை பார்க்க ஏராளமானோர் அங்கு கூடி இருந்தது என்னை பார்த்து கையசைத்தும் எனக்கு வாழ்த்து தெரிவித்து ஆகியவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். மலேசியா மக்களுக்கு எனது நன்றி என தெரிவித்துள்ளார் மேலும் இவர் பதிவு செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.