nazriya

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்து குத்துன்னு குத்தும் அஜித்தின் தீவிர ரசிகை நஸ்ரியா.!! லைக் அள்ளிக் குவிக்கும் வீடியோ..

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் மலையாள நடிகைகளுக்கு தனி இடம் உண்டு.  அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு வேறு யாருக்கும் கிடைக்காது. அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்த நடிகை தான் நஸ்ரியா.

இவர் தமிழில் முதன்முதலாக நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தில் நஸ்ரியாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

ரசிகர்கள் மனதில் குடி வந்துவிட்டார். அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் என்னும் நிக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.  இப்படியே போனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என நினைத்து வந்தார்கள்.

அதன் பிறகு மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் தலை காட்டவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.  தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் ஒரு சில படவாய்ப்புகளை பெற்று நடித்து இருக்கிறார் அதேபோல் தமிழ் சினிமாவிலும் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வளைதளத்தில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ அதிக லைக் பெற்று வைரலாகி வருகிறது.வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

nazriya

அஜித்தின் தீவர ரசிகர்களால் உருவக்கபட்ட வலிமை திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட நடிகை நஸ்ரியா!! வைரலாகும் வீடியோ.

valimai movie fan created teaser released by actress nazriya video viral: அஜித் தற்பொழுது  எ.ச்  வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாய்தராபாத்தில் செட் போட்டு அங்கு படக்காட்சிகள் எடுத்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பினார் தல அஜித்.

மேலும் இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வருமா என பல ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை சமூக வலைதள பக்கங்களில் டார்கெட் செய்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தல அஜித்தின் ரசிகரான எக்ஸ் பிரஷன் குயின் நஸ்ரியா வெறித்தனமான அஜித் ஃபேன் ஆவார்.

இவர் அஜித்தை பற்றி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோ காணொளி வந்தாலும்  அதை எடுத்து உடனுக்குடன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவார்.

மேலும்  தல அஜித்தின் தீவிர ரசிகரான ஒருவர் வலிமை படத்தின் டீசர் இப்படி தான் இருக்கும் என்று உருவாக்கிய வீடியோ காணொளியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.

நஸ்ரியா வெளியிட்ட அந்த வீடியோ காணொளி பார்ப்பதற்கு வலிமையை படத்தின் உண்மையான டீசர் போலவே காட்சியளிக்கிறது. இந்த வீடியோ காணொளி யூடியூபிலும் வைரலாகி வருகிறது.

https://youtu.be/kOJ6WueKbKo