தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு சீன் போட்டிங்க.! இது என்ன டிரஸ் மேடம்.! நஸ்ரியாவை விளாசும் நெட்டிசன்கள்.

நடிகை நஸ்ரியா தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தமிழில்  ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இளசுகள் மத்தியில் சேர் போட்டு அமர்ந்தவர். இன்னும் பல இளசுகளின் கனவு கன்னியாக இருப்பவர்.

சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு சில மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா தனது தலை முடியை பாப் கட்டிங் செய்து கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “தமிழ் படத்துல இடுப்ப காட்டிடாங்கன்னு கதறுனீங்க…? இப்போ இது என்ன ட்ரெஸ்சு..?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

nazriya
nazriya

தனுஷுடன் நையாண்டி திரைப்படத்தில் நடித்த பொழுது நடிகை நஸ்ரியா இயக்குனர் என்னுடைய அனுமதி இல்லாமல் எனது தொப்புளை காட்டி உள்ளார் ஆனால் படப்பிடிப்பின் போது நான் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. வேறொரு பெண்ணின் தொப்புளை ஷூட் செய்து என்னுடைய தொப்புள் போல் காட்டி விட்டார்கள் என பகீர் குற்றச் சாட்டை வைத்தார்.

இதை மறக்காத ரசிகர்கள் இப்படியெல்லாம் தமிழ் இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துவிட்டு இப்பொழுது இது போல் உடையணிந்து சுற்றி வருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

nazriya
nazriya

Leave a Comment