பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் கதிர். மேலும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் ‘யூகி’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது.
அந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த டீசரில் ஒரு பெண் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என போலீசார் மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள் ஆனால் அதனை கண்டுபிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
மேலும் அந்தப் பெண்ணை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே யூகி படத்தின் கதை என கூறப்படுகிறது. கதிர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நரேன் நட்டுராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனீஸ் காந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தை ஜாக் ஹாரிஸ் இயக்க புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிறகு ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.