புதிய திரைப்படத்தில் இணைந்த திவ்யபாரதி.! ஹீரோ யார் தெரியுமா?

0
divya-bharathi
divya-bharathi

பொதுவாக சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இதன் மூலம் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.அந்த வகையில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தத் திரைப்படம் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி அன்று திரையரங்குகளில் நேராக அறிமுகமான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

மேலும் இது திரைப்படத்தினை புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியிருந்தார். இவ்வாறு தனது முதல் திரைப்படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திவ்யபாரதிக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது. இவர் நடிப்பு உள்ள புதிய திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகர் கதிர் நடிக்க இருக்கிறார்.

kathir
kathir

ஆமாம் ,அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் கதிர். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சுழல் என்ற வெப்சி சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் கதிர் மற்றும் திவ்யபாரதி இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தினை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இத்திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ISHQ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கூடுதல் தகவலின் படி இவர்கள் இணைந்து நடிக்க உள்ளே திரைப்படத்திற்கு நடிகர் அஜித்குமார் உடைய பிளாக்பஸ்டர் படத்தின் பெயரை படக்குழு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.