வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் பிட்டு படத்தையும் விட்டு வைக்காத எதிர்நீச்சல் பிரபலம்.! வீடியோவை பார்த்த அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

Ethirneechal : சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் எதிர்நீச்சல் சீரியல் லெவலுக்கு எந்த ஒரு சீரியலும் பிரபலமடையவில்லை. அந்த அளவு தற்போது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சுவாரசியத்தைசேர்த்து வருகிறார் இயக்குனர்.

குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் இந்த செய்தி சினிமா பிரபலங்களிடையே மட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இனி அடுத்த குணசேகராக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது இந்த நிலையில் அடுத்த குணசேகரனை சீரியல் குழு களம் இறக்க இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில்  கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விபு ராமன் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தமிழில் இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, அடிமேளம், ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான்.

ஆளு அழகாக இருந்தாலும் தன்னுடைய முகத்தில் வில்லத்தனத்தை காட்டி வருகிறார் அதனால் இவருக்கு சீரியலில் நல்ல ஸ்கோப் கிடைத்து வருகிறது. ஆதி குணசேகரனுக்கு தம்பியாக நடித்துள்ளார் இந்த நிலையில் இவரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2011 ஆம் ஆண்டு இவர் அநாகரிகம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம எதிர்நீச்சல் கதிரா இப்படி நடித்துள்ளது என வாயை பிளந்து பார்க்கிறார்கள்.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்பு தேடியும் கிடைக்காத சமயத்தில் சினிமாவில் எப்படியாவது நுழைந்தால் போதும் என்ற எண்ணத்தில் மோசமான திரைப்படமாக இருந்தாலும் பரவாயில்லை மோசமான கதையாக இருந்தாலும் பரவாயில்லை நடித்து சம்பாதித்து திரைக்குள் நுழைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அநாகரிகம்  திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திரைப்பத்தில்  கிட்டதிட்ட பிட்டு பட ரேஞ்சில் நடித்துள்ளார் கதிர்.

kathir
kathir