ஏராளமான நடிகைகள் அறிமுகமான சில படங்களிலேயே ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்களுக்கு தொடர்ந்து திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி செட்டிலானவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை அனுயா.
இவர் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் மிகவும் அருமையாக பாடும் காட்சிகள் உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான படம் தான் சிவா மனசுல சக்தி மேலும் இவர்களை தொடர்ந்து சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அனுயா நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்குப் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இந்நிலையில் இவர் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுயா பிறகு ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிகள் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் 7வது நாளிலேயே வெளியேறிய நிலையில் அனுயா சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் ஒரு ஆங்கில பாடலை மிகவும் அழகாக பாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கும் நிலையில் இது அவருடைய குரலாக என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..