soundarya-1

மறைந்த நடிகை சௌந்தர்யா போலவே அச்சு அசலாக இருக்கும் இளம் பெண்.! பட்டம் கொடுத்த ரசிகர்கள்..

சினிமாவை பொருத்தவரை ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டால் அவர்கள் இறந்தாலும் கூட அவர்களுடைய மனதில் இருந்து மறைய மாட்டார்கள் அந்த வகையில் ஒரு நடிகை தான் சௌந்தர்யா. தமிழ் சினிமாவில் சௌந்தர்யா போல மற்றொரு நடிகையை என்னும் காண முடியவில்லை அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் நடித்த ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சௌந்தர்யா போலவே இருக்கும் இளம்பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

soundarya
soundarya

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அருணாச்சலம், படையப்பா மற்றும் கமலஹாசன் உடன் காதலா காதலா, கார்த்தி உடன் பொன்மணி, விஜயகாந்த் அவர்களுடன் தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவ்வாறு சிறந்த நடிகையாக வலம் வந்த இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார்.

soundharya 1
soundharya 1

அந்த வகையில் கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் பயணம் செய்த பொழுது ஹெலிகாப்டர் வெடித்து விபத்துக்கு உள்ளானதால் அந்த விபத்தில் நடிகை சௌந்தர்யா காலமானார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அச்சு அசலாக சௌந்தர்யா போலவே இருக்கும் இளம்பெண் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

soundharya 2
soundharya 2

அந்த வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரை ரசிகர்கள் ஜூனியர் சௌந்தர் என்று அழைத்து வருகிறார் எனவே தொடர்ந்து ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட சொல்லி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

soundharya
soundharya

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..