படையப்பா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை – அதை நினைச்சு இப்ப கூட ரொம்ப வருத்தப்படுறாராம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக நம்பர் ஒன் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டு ஓடுகிறார் இப்பொழுதும் அதை விட்டுக் கொடுக்காமல் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் நெல்சன் திலிப் குமாருடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர்.

திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிவுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி சிவராஜ் குமார் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கிறது இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா நிறுவத்துடன் கைகோர்த்து இரண்டு படங்கள் பண்ண இருக்கிறார்.

அதில் முதலாவதாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் முதலில் நடிக்க இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடித்த படையப்பா திரைப்படம் குறித்து சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் படையப்பா.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகியிருந்தது. இந்த படத்தில் ரஜினி உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன், அப்பாஸ், சிவாஜி கணேசன் என்ன ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது படம் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்து இருப்பார். முதலில் நடிக்க வேண்டியது நடிகை மீனா தான்.. முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்துள்ளார் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தில் இருந்து மீனா விலகிக் கொள்ள பின் சௌந்தர்யா நடித்தாராம்..