குஷ்பூ என் வாழ்கையில் வரவில்லை என்றால் இந்த நடிகையை கரெக்ட் பண்ணி இருப்பேன்.!

0

90 காலகட்டங்களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் சுந்தர்சி இவர் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து சிறப்பான கதைகளை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் வளரத் தொடங்கினார்.

அந்த வகையில் இவர் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், சுயவரம், உன்னைத்தேடி, கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை போன்ற சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு தற்பொழுது வலம் வருகிறார் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக மட்டும் தனது பணியை முடித்துக் கொள்ளாமல் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தற்போது வரையிலும் தனது பணியை மேம்படுத்திக் கொண்டு வருகிறார்.

மேலும் இவர் சின்னத்திரையில் பல சீரியல்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்புவை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே இவர்களுக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

sundar c and kusboo
sundar c and kusboo

சுந்தர்சி பேட்டி ஒன்றில் நடிகை சௌந்தர்யாவின் புகைப்படத்தை பார்த்து சில தகவல்களை கூறியுள்ளார். நான் குஷ்பு வாழ்க்கையில் வராத பட்சத்தில் சௌந்தர்யாவை காதலித்து ப்ரொபோஸ் செய்திருப்பேன் என்று கூறினார் மேலும் சௌந்தர்யாவும் அவரது அண்ணனும் ஒன்றாக இருப்பார்கள் அதேசமயம் இவர்கள் ஒரே விபத்தில் இறந்து உள்ளனர் என்றும் கூறினார்.