saayyisha

முதன்முறையாக தன்னுடைய மகளுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட சாயிஷா.! வைரலாகும் வீடியோ

நடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா தனது மகளுடன் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 42 வயதாகும் நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு வனங்கான் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்த நட்சத்திர ஜோடிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு அரியானா என பெயர் வைத்தனர். இந்நிலையில் அடிக்கடி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சாயிஷா வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆர்யாவின் திருமணத்திற்கு பிறகு சாயிஷா படங்களில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் பத்து தல  படத்தில் இடம்பெற்று இருந்த ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனம் ஆடி இருந்தார் இதனால் பல விமர்சனங்களை சந்தித்தார் இருந்தாலும் இவருக்கு நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் இருந்து வருவதனால் தொடர்ந்து நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படி இவருக்கு பலவகையான நடனங்கள் தெரியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவ்வாறு விமர்சனங்களை சந்தித்தாலும் பத்து தல படத்தில் இடம்பெற்று இருந்த ராவடி பாடலுக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது இந்த பாடலில் கௌதம் கார்த்தி உடன் இணைந்து ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் செம குத்தாட்டம் போட்டிருந்தார்.

இவ்வாறு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சாயிஷா தொடர்ந்து தனது நடன வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது 2 வயதே ஆகும் தனது செல்லக்குட்டி அரியானாவுடன் தற்பொழுது நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் சாயிஷா போல நடனமாடுவன பாத்தா ஆர்யா போல ஆடுற என கிண்டல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

arya

அழகில் சாயிஷாவையே ஓரங்கட்டிய ஆர்யாவின் மகள்.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஆர்யா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய மனைவி குழந்தையுடன் வெக்கேஷனுக்காக துபாய் சென்றுள்ளார் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சாயிஷா சோசியல் மீடியாவில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கஜினி திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வந்த ஆர்யா சாயிஷா இருவரும் இந்த படத்தின் மூலம் காதலிக்க தொடங்கிய நிலையில் பிறகு ஆரியா தனது காதலை வெளிப்படுத்த இருவரும் தங்களது பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சாயிஷா நடனத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவர் எனவே பல வகையான நடனங்களை ஆடுவார்.

அப்படிதான் கர்ப்பமாக இருக்கும் பொழுது கூட சாய்ஷா தொடர்ந்து நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார். இவ்வாறு திருமணத்திற்கு பிறகு சாய்ஷா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் ஆனா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் திருமணமான பிறகு ஹாட் போட்டோ ஷூட், வீடியோக்கள் நடனமாடும் வீடியோக்கள், ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சாயிஷா தனது மகளையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் தனது மகளுடன் இருக்கும் போட்டோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் துபாய் சென்று இருக்கும் நிலையில் அங்கு இருக்கும் பார்க்குக்கு ஆர்யா மற்றும் தனது மகளுடன் சென்றுள்ளார்.

அங்கு க்யூட்டாக சாயிஷா ஊட்டி விட குழந்தை சாப்பிடுகிறது அதனை ஆர்யா மகிழ்ச்சியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை சாய்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அதற்குள்ள ஆர்யாவின் மகள் இப்படி வளர்ந்து விட்டாரே என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

pathu-thala

பத்து தல ‘ராவடி’ பாடலுக்கு கவர்ச்சியில் குத்தாட்டம் போட்டிருக்கும் ஆர்யா மனைவி சாயிஷா.! வைரல் வீடியோ..

நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடல் தற்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பத்து தல இந்த படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் நிலையில் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த முஃட்டி என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்பு நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் பத்து தல இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் விரும்பும் சிம்புவை பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அந்த வகை இந்த படத்தில் ஏஜிஆர் என்கின்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ள நிலையில் மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார் மேலும் பிரிய பவானி சங்கர் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர் தான் இந்த படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்துள்ளார். மேலும் இவர்களை தொடர்ந்து டி கே அருணாச்சலம், கௌதம் மேனன் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளங்களும் இணைந்து நடித்துள்ளனர். இவ்வாறு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் ஐட்டம் பாடலான ராவடி பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா நடனமாடியுள்ளார். அது குறித்த சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகும் இவ்வாறு நடனம் ஆடுவது மிகவும் தவறு என பல விமர்சனங்களுக்குரிய பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஐட்டம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வர இந்த பிரம்மாண்டமான பாடலை ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.