வயசானாலும் பரவாயில்லை வசதியா இருக்காங்களே என திருமணம் செய்து கொண்ட 5 தமிழ் நடிகைகள்…

Tamil Actress: சினிமாவைப் பொறுத்தவரை ஏராளமான நடிகைகள் தங்களுக்கு நல்ல மார்க்கெட் இருந்தால் உடனே திருமணம் செய்துக் கொள்வது கிடையாது தனக்கு 40 வயதாகும் பொழுது கூட திருமணம் செய்து கொடுப்பவர்களை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் திடீரென்று தன்னைவிட அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துக் கொண்ட டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

1. நஸ்ரியா-பகத் பாசில்: 1994ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு 2013ல் வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நய்யாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நடிகர் பகத் பாசில் வில்லனாக பிரபலமாகி இருக்கும் நிலையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது. இவர்கள் இருவரும் 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நடந்த விபத்து.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..

2. சாயிஷா-ஆர்யா: நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து கஜினி காந்த் திரைப்படத்தில் ஒன்றாக நடித்து வரும் பொழுது ஆர்யாவிற்கு சாய்ஷாவை மிகவும் பிடித்துள்ளது. எனவே தனது காதலை வெளிப்படுத்த இருவரும் பிறகு குடும்பத்தின் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசம் உள்ளது.

3.கன்னிகா-சினேகன்: பாடலாசிரியர், கவிஞர், நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் சினேகன். சின்னத்திரை சீரியல்களின் மூலம் நடிக்க தொடங்கிய கன்னிகா பிறகு சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். பட வாய்ப்புக்காக கன்னிகா சினேகனை தேடிச் செல்ல இதன் மூலம் ஏற்பட்ட நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறி உள்ளது. இவர்கள் இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளது.

4. குட்டி ராதிகா-குமாரசாமி: நடிகை குட்டி ராதிகா கன்னட சினிமாவின் மூலம் தனது கெரியரை தொடங்க அதன் பிறகு 2003ஆம் ஆண்டு வெளியான இயற்கை என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் குமாரசாமி என்ற அரசியல்வாதியை திருமணம் செய்து கொண்டார் குமாரசாமி ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்திருந்தார்.

அதேபோல் குட்டி ராதிகாவிற்கும் தனது 14 வயதிலேயே திருமணம் நடைபெற்றுள்ளது ஆனால் அவருடைய கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார். அதன் பிறகு குட்டி ராதிகா-குமாரசாமியின் திருமணம் மிகவும் சீக்ரெட்டாகவே இருந்தது. இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 27 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில் ராதிகா பணத்திற்கு ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்.! வாசலோடு திரும்பிய சோகம்.? என்ன நடந்தது தெரியுமா.?

5. சந்தியா-சந்திரசேகரன்: 2004ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் படத்தில் ஜோடியாக நடித்த சந்தியா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரபலமான இவரை காதல் சந்தியா என ரசிகர்கள் அழைத்து வந்தனர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த சூழலில் தான் சந்திரசேகரன் என்பவருடன் திடீரென திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கிடையே 14 வயது வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது.