சிக்கிய கலிவரதன் மாட்டிய ஆதாரம்… டார்ச்சர் செய்ததால் ஜெயில் வார்டன் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய சரஸ்வதி… தொக்கா பிடிக்கப் போகும் தமிழ்..

thamizhum saraswathiyum February 13 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் கலிவரதனுக்கும் கொலைக்கும் சம்மந்தம் இருப்பதாக கூறுவதால் உடனே போலீஸ் கலிவரதனை தேடி செல்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பே வக்கீல் களிவரதனிடம் மொத்த சொத்தையும் ட்ரஸ்ட் க்கும், அனாதை ஆசிரமத்திற்கும் முதியோர் இல்லத்திற்கும் எழுதி வைத்துவிட்டார் மேகனா என கூறிக் கொண்டிருக்கிறார். ஒரு சின்ன பிட்டு இடம் கூட எங்களுக்கு விடலையா என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் கூட மேகனா கிட்ட கேட்டேன் உங்க மாமாவுக்கு ஏதாவது விடனுமா என ஆனால் அவர் அவங்களுக்கு கை கால் நல்லா தான் இருக்கு அவங்களுக்கு ஏற்கனவே நான் நிறைய செஞ்சுட்டேன் இதுக்கு மேல எதுவும் தேவையில்லை என சொல்லிவிட்டார் என கூறுகிறார். அனைத்தையும் முடித்துவிட்டு வக்கீல் கிளம்புகிறார் அடுத்த காட்சியில் போலீஸ் களிவரதனை தேடி வந்துள்ளது உடனே தமிழ் நீங்க அவரை மிரட்டுவது போல் பேசுங்கள் அது மட்டும் இல்லாமல் எவ்வளவு கொடுப்பீங்க என பேசுங்கள் நாங்கள் வீடியோ எடுத்து விடுகிறோம் என பேசிக் கொண்டிருக்கிறார்.

மாமா என்று கூட பார்க்காமல் சட்டையை பிடித்த சத்தியா கையை உடைத்துவிட்ட முத்து.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை

அப்பொழுது தமிழ் மற்றும் நமச்சி இருவரும் பின்புறமாக இருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் போலீஸ் கலிவரதனிடம் இந்த கொலைக்கு உங்களுக்கும் சம்மந்தம் இருக்குது அது எனக்கு தெரியும் எவ்வளவு பணம் கொடுப்பீங்க என பேச அதற்குள் நமச்சி ஒரு பொருள் மீது காலை வைத்து விடுவதால் சவுண்டு கேட்டு கலிவரதன் உஷாராக மாறிவிடுகிறார் உடனே என் பொண்ணு மாதிரி வளர்த்தேன் என் மேலே சந்தேகப்படுறீங்களா என்னங்க நடக்குது என பேசிக்கொண்டு இருக்கிறார்.

உடனே கொலையை செய்தது சரஸ்வதி தான் அவளுக்கு தண்டனை கிடைத்தே ஆகணும் என கூற தமிழ் ஆவேசப்பட்ட அடிக்க வருகிறார். தமிழ் போட்ட பிளான் இங்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. உடனே உங்க மீது கேஸ் போடுவேன் என கலிவரதன் போலீஸிடம் மிரட்ட உங்க மேல எனக்கு டவுட்டா இருக்கு விசாரணை இன்னும் போயிட்டு தான் இருக்கு அதனால விசாரிக்க எனக்கு உரிமை இருக்கு என பேசுகிறார்.

இதுதான் விஜய்யின் சூரியவம்சம் வர்ஷன்.. என்னைய புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணிருக்கணும்…

அடுத்த காட்சியில் சரஸ்வதி சாப்பாடு வாங்க வருகிறார் அப்பொழுது ஜெயில் வார்டன் உப்பு மிளகாய் தூள் அனைத்தையும் கொட்டி கொடுக்கிறார் அதுமட்டுமில்லாமல் நான் நெனச்சா என்ன வேணாலும் பண்ணுவேன் உன் குழந்தை ஒரு கொலைகார குழந்தை அதுவும் திருடனாவோ பிட்பாக்கெட் அடிக்கிறாவனோ கொலைக்காரனோ தான் இருப்பான் எனக் கூற தட்டில் இருக்கும் மிளகாய் சாப்பாடு எடுத்து வார்டன் மூஞ்சியில் அடிப்பது போல் நினைத்துப் பார்க்கிறார்.

உடனே ஜெயில் வார்டன் என்ன அந்த தட்டுல இருக்குற மிளகாய் பொடியை மேல கொட்ட தோணுதா அப்படி எல்லாம் செய்யணும்னு நினைச்ச என்னாச்சு உன்னை நான் சும்மாவே விடமாட்டேன் உனக்கு நாலு டிராப் கொடுத்தா போதும் உன் குழந்தை இந்த உலகத்தையே பார்க்காது உன் குழந்தைய அழிச்சிடுவேன் என பேச சரஸ்வதி கதறி அழுது கொண்டு நீங்க என்ன சொன்னாலும் செய்கிறேன் எனக்கு எவ்வளவு டார்ச்சர் வேணாலும் கொடுங்க என் குழந்தையை விட்டுடுங்க என பேசுகிறார்.

9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட பிரபுதேவா இயக்கிய திரைப்படம்.! தலைவன் அப்பவே மாஸ் காட்டியுள்ளாரே…

பிறகு உப்பு மிளகாய் பொடி கலந்த சாப்பாடை சாப்பிடுகிறார் அடுத்த காட்சியில் தமிழ் நமச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள் அப்பொழுது நம்ம நினைத்தது நடக்க வில்லை எப்படியாவது எவிடன்ஸ் கலெக்ட் பண்ணனும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது திருடனை பிடிக்க வந்த போலீஸ் கைரேகை தான் இல்லையே எப்படி நாங்க மாட்டினோம் என கேட்க உன் கைரேகையை  வீட்டில் இருக்கிறத அழிச்சிட்ட ஆனா கேட்ல இருக்கு என கூறிக் கொண்டிருக்கிறர் அந்த சமயத்தில் தமிழுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது கண்டிப்பாக கொலைகாரன் கைரேகையை  விட்டிருப்பான் என யோசிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்