எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த இயக்குனர்.? உண்மையை உடைத்த அஞ்சலி..

Actress Anjali interview: பீரியட்ஸ் நேரத்தில் இயக்குனர்கள் அதையெல்லாம் செய்ய சொல்வார்கள் என அஞ்சலி தனக்கு படப்பிடிப்பும் பொழுது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார். 2007ஆம் ஆண்டு வெளியான கற்றல் தமிழ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி இந்த படத்தில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து 2010ல் வெளியான அங்காடி தெரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த அஞ்சலி தற்பொழுது 18 படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தனது சித்தி கொடுமை செய்வதாக போலீசில் புகார் அளித்தார் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை சித்தி பாரதி தேவி அபகரித்து விட்டதாகவும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகாரியில் தெரிவித்தார்.

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து உடலில் பிளேட் வைத்து பொருத்தப்பட்ட 5 நடிகர்கள்.!

இவ்வாறு இந்த பிரச்சனை ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் நடிகர் ஜெய்யை அஞ்சலி காதலித்து வந்த நிலையில் திடீரென அமெரிக்கா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனதாகவும் சொல்லப்பட்டது ஆனால் இதனை முழுவதுமாக அஞ்சலி மறுத்தார்.

தற்பொழுது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கும் அஞ்சலி சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், பொதுவாக ஒவ்வொரு பெண்களுக்கும் பீரியட்ஸ் நேரத்தில் பல வகையான வேதனைகள் ஏற்படும் அடிவயிற்றில் வலி இருக்கும் உடல் வலி இருக்கும் எனக்கு எப்போதெல்லாம் பீரியட்ஸ் நேரம் வருகிறதோ அப்போதுதான் மழையில் நனைந்தபடி நடிக்க சொல்வார்கள்.

சினிமாவில் கூட இருந்தவர்களை தம்பியாக நினைத்து வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 பிரபலங்கள்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்..

ஈரமான உடைகளை அணிய சொல்வார்கள் மிகவும் மகிழ்ச்சியான காட்சிகளில் நடிக்க சொல்வார்கள். ஆனால் நமக்கு வலி இருக்கும் அத்துடன் கடுமையான டான்ஸ் மூமண்டுகளை எல்லாம் செய்ய சொல்வார்கள் எனக்கு ஒரு விதமான கடுப்பாக இருக்கும் அதனால் என்னுடைய பீரியட்ஸ் நேரத்தில் இயக்குனர்களிடம் இப்படிப்பட்ட காட்சிகளை வைக்கக்கூடாது என சொல்லி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்