ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து உடலில் பிளேட் வைத்து பொருத்தப்பட்ட 5 நடிகர்கள்.!

Tamil Actors: நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் போது ரிஸ்க் எடுத்து நடிப்பதும் உண்டு அப்படி படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்குவது வழக்கம்தான். சொல்லப்போனால் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் தங்களது படங்களில் ஸ்டண்டு காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதால் பல அடிகள் வாங்கி உள்ளார்கள். அந்த வகையில் அப்பொழுது ஏற்பட்ட விபத்தால் ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட் பொருத்தப்பட்ட 5 ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம்.

அப்பாஸ்: நடிகர் அப்பாஸ் தான் சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் பல ஸ்டண்டு காட்சிகளில் நடித்திருப்பார். அப்படி படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது எனவே இதற்காக ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட் வைத்துள்ளார்.

அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.! மூக்கு உடைந்து நிற்கும் விஜயா…

ஆர்யா: நடிகர் ஆர்யாவுக்கு பட்டியல் படத்தின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது எனவே இவருக்கும் ஆபரேஷன் செய்து இரும்பு பிளேட் வைக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன்: ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தனது அனைத்து படங்களிலும் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை மிகவும் விரும்புவார். இதனால் ஒரு முறை தனது கை எலும்பு முறிய இதனால் இரும்பு பிளேட் வைக்கப்பட்டுள்ளது.

அஜித்: தல அஜித் அவர்கள் பல ஸ்டண்டு காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். மேலும் பைக் ரேசிலும் ஆர்வமுடையவராக அஜித் இருக்க தொடர்ந்து விபத்தில் சிக்கியதால் பல இடங்களில் இவருக்கு பிளேட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உடம்பு முழுவதும் பல ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டு உள்ளது.

லால் சலாம் போல் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்த திரைப்படங்கள்.! ஆத்தாடி லிஸ்ட் பெருசா போகுதே..

கமல்ஹாசன்: பொதுவாக கமல்ஹாசன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக புதிதாக ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கக் கூடியவர் அப்படி இதனால் பல இடங்களில் பல ஆபரேஷன் செய்யப்பட்டு இரும்பு பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்