சினிமாவில் கூட இருந்தவர்களை தம்பியாக நினைத்து வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 பிரபலங்கள்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்..

Tamil Actors: சினிமாவில் பிரபலமாக வேண்டும் என சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வாய்ப்பு தேடியவர்கள், சினிமாவிற்கு அறிமுகமாகியும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வந்தவர்களும் உள்ளனர். இந்த சூழலில் தனக்கு தெரிந்த கஷ்டப்படும் ஒருவரை சினிமாவில் தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம்.

வெங்கட் பிரபு: இயக்குனர் வெங்கட் பிரபு தனது இயக்கத்தில் வெளியாகும் பல திரைப்படங்களில் நடிகர் வைபவ்விற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல் ஹீரோ இல்லாமல் கூட படம் எடுப்பார் ஆனால் தம்பி இல்லாமல் படத்தை எடுக்க மாட்டார் என சொல்லும் அளவிற்கு தனது தம்பி பிரேம்ஜி அமரனுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சத்தமே இல்லாமல் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் அப்டேட்டை சொன்ன சூப்பர் ஸ்டார்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்..

கே.எஸ் ரவிக்குமார்: இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தனது இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி ராஜ்ஜியம் படத்தில் சரவணனை ஹீரோவாக நடிக்க வைத்த அழகு பார்த்தார். அதன் பிறகு தான் சரவணன் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

விஜய் சேதுபதி: ஜிகர்தண்டா படத்தில் மாஸ் காமித்த பாபி சிமஹா அவர்களுக்கு பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களில் இவரை ரெக்மெண்ட் செய்தது விஜய் சேதுபதி தான்.

சிம்பு: நடிகர் சிம்பு தனது மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் சந்தானம் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளார். இவ்வாறு சந்தானம் சினிமாவில் வளர்வதற்கு சிம்பு பல இடங்களில் உதவி செய்துள்ளார் என கூறப்படுகிறது.

அட நம்ம ஷெரினா இது.. 18 வயது இளம் பெண்ணை போல் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

தனுஷ்: 3 படத்தில் தனது நெருங்கிய நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தது மட்டுமல்லாமல் அவர் மேல் நம்பிக்கை வைத்து எதிர்நீச்சல் படத்தையும் இயக்கினார் தனுஷ். இவ்வாறு சின்னத்திரையில் பணியாற்றி வந்த சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வளர்வதற்கு அடித்தளமாக தனுஷ் இருந்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்