சத்தமே இல்லாமல் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் அப்டேட்டை சொன்ன சூப்பர் ஸ்டார்.. குஷியில் ரஜினி ரசிகர்கள்..

Thalaiver Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாஸில் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வேட்டையன் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனது 171வது படத்தில் இணைய இருக்கிறார். தலைவர் 171வது படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்றியா.. இயக்குனரிடம் கர்ஜித்த இளையராஜா..

ரஜினிகாந்த் இளமையாக காட்ட டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம். வேட்டையன் பட படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் விரைவில் 171வது படத்தின் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது எனவே இதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கடைசியாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இதற்கான ப்ரோமோஷன்களிலும் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது வேட்டையன் படப்பிடிப்பிற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார் ரஜினி.

வசூலில் முதல் நாளில் பட்டய கிளப்பிய லால் சலாம்.. எத்தனை கோடி தெரியுமா…

மேலும் இப்படத்தில் நடிக்கப் போகும் நடிகர் குறித்த அப்டேட் விரைவில் லோகேஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ்-ரஜினியின் காம்போவில் உருவாகும் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்