நான் வாந்தி எடுத்ததை என்னையே சாப்பிட சொல்றியா.. இயக்குனரிடம் கர்ஜித்த இளையராஜா..

ilaiyaraja : தமிழ் சினிமாவில் இசையை மாற்றி அமைத்தவர் இசைஞானி இளையராஜா அதேபோல்  இன்றுவரை இசைஞானி இளையராஜாவின் இசை தான் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்னதான் தற்பொழுது எத்தனையோ புது புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா போட்ட பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

இந்த நிலையில் தினந்தோறும் என்ற திரைப்படத்தின் இயக்குனர் நாகராஜ் இளையராஜா பற்றி பேசியுள்ள விஷயம் சமீபத்தில் வைரலாகி வந்தது. ஆரம்பத்தில் இளையராஜா மேடை நாடகங்களுக்கு தான் இசை அமைத்துக் கொண்டிருந்தார்  1975 ஆம் ஆண்டு வெளியாகிய அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

வசூலில் முதல் நாளில் பட்டய கிளப்பிய லால் சலாம்.. எத்தனை கோடி தெரியுமா…

இந்தப் பாடல் மாபெரும் ஹிட் அடித்தது அன்னக்கிளி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால்  ஒரு நாளைக்கு பத்து திரைப்படங்களில் இசையமைக்கும் அளவிற்கு மிகவும் பிசியாக இருந்தார் அதேபோல அந்த பத்து பாடத்தின் பாடலும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது இளையராஜா தன்னுடைய உயிரை பணயம் வைத்து உழைத்தார்.

ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் இசை இருந்தால் போதும் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் தன்னுடைய படம் என பல இயக்குனர்கள்  நினைத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என ஒற்றை காலையில் நின்றார்கள் பல இயக்குனர்கள் இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த ஒரு இயக்குனரும் இந்த இசையமைப்பாளர் இருந்தால் ஹிட் என சொல்லும் அளவிற்கு வளரவில்லை.

தனுஷின் மூணு படம் பிலாப் ஆனதற்கு காரணம் அனிருத் தானா..? பல வருடங்களுக்கு பிறகு உண்மையை கூறிய ஐஸ்வர்யா…

இளையராஜா இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற அந்தாலஜிக்கு மூன்று கதைகளுக்கும் வட்டார வழக்கு படத்திற்கு இசையமைத்திருந்தார் 2கே கிட்ஸ்களுக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் பிடித்து விட்டது.. இளையராஜா மீது பல பெருமைகள் இருந்தாலும் ஒரு சில விமர்சனங்களும் இருக்கிறது

இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் கர்வமாக இருப்பார் என குற்றச்சாட்டு இருந்து வருகிறது திறமை உள்ளவர்கள் அப்படி இருந்தால் என்ன தப்பு இப்படி ஒரு திறமையாளரை இனி யாராலும் பார்க்கவே முடியாது.  நாகராஜ் கூறியதாவது தினந்தோறும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் நாகராஜ் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆகாயம் என்ற திரைப்படத்தை நான் இயக்குவதாக இருந்தது அந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவை இசையமைக்க முடிவு செய்தோம் அவரிடம் சென்று ஒரு கதையை கூறினேன் கதையை எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

சிக்ஸ் பேக் நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் எஸ் ஜே சூர்யா.! யார் இயக்கத்தில் தெரியுமா..

கதையை கேட்டு முடித்ததும் நாலு டியூன்களை அந்த இடத்தில் வைத்து போட்டார். நான் பிடிக்கவில்லை என்று சொன்னேன் உடனே அவர் என்னிடம் உனக்கு இதில் என்ன பிடிக்கவில்லை என்று கேட்டார் நான் உடனே சார் எனக்கு காதலுக்கு மரியாதை படத்தில் இடம்பெற்றுள்ளது போல் ஒரு பாடல் டியூன் இருக்க வேண்டும் என கேட்டேன் உடனே கோபம் அடைந்த இளையராஜா நான் வாந்தி எடுத்ததை திரும்பவும் என்னை சாப்பிட சொல்றியா.

அது எப்படி என் பாட்டு அது வெளியில வந்துட்டா அது உங்களுடைய பாட்டு என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் வேற டியூன் போட்டு கொடுத்தார் அந்த பாடல் மிகவும் பிடித்திருந்தது ஆனால் அந்த படத்தை சில காரணங்களால் எங்களால் தொடங்க முடியவில்லை எனக் கூறியிருந்தார்.