வசூலில் முதல் நாளில் பட்டய கிளப்பிய லால் சலாம்.. எத்தனை கோடி தெரியுமா…

தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர் இயக்கத்தில் ஏற்கனவே சில திரைப்படங்கள் வெளியாகி உள்ளன இந்த நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியவர்களை வைத்து லால் எல்லாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு அருகே மூணார் பாத் என்ற ஊரில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் அரசியலுக்காக அவர்களுக்குள் பிளவு ஏற்படுத்தப்பட்டு ஆதாயம்  பார்க்கிறார்கள் அரசியல்வாதிகள் அதனால் வெற்றியும் அடைகிறார்கள் இதனால் அந்த கிராமம் என்ன ஆனது அதனால்  யாருக்கு இழப்பு ஏற்பட்டது மீண்டும் ஒற்றுமையாக இணைந்தார்களா ஊர் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் திரைப்படத்தின் கதை.

தனுஷின் மூணு படம் பிலாப் ஆனதற்கு காரணம் அனிருத் தானா..? பல வருடங்களுக்கு பிறகு உண்மையை கூறிய ஐஸ்வர்யா…

இதில் விஷ்ணு விஷால் இந்து இளைஞர்களுக்கு கிரிக்கெட் அணியின் வீரரராகவும்  விக்ராந்த் இஸ்லாமிய இளைஞர்களுக்கு கிரிக்கெட் அணியின் வீரராகவும் இருக்கிறார்கள். அதிலும் விக்ராந்த் மொய்தின் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினியின் மகனாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு அணிக்கும் இடையே நடக்கும் போட்டியில் பிரச்சனையை ஏற்படுத்தி ஊரை கலவரம் ஆக்கி விடுகிறார்கள் சிலரின் சுயநலத்திற்காக தான் இப்படி ஒரு கலவரம் நடைபெறும்.

மதத்தின் பெயரால் சிலர் நம்மை பிரித்தாலும் பிரிக்க நினைத்தாலும் அவர்களை தோற்கடிக்க வேண்டும் ஒற்றுமையுடன் இருக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது தெரியவந்துள்ளது அதாவது வசூல் சுமார் 8 கோடி செய்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்