சிக்ஸ் பேக் நடிகருக்கு வில்லனாக களம் இறங்கும் எஸ் ஜே சூர்யா.! யார் இயக்கத்தில் தெரியுமா..

நடிகர் விக்ரம் தமிழில் கடைசியாக பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்களை நடித்து நம்பர் ஒன் ஹீரோவாக இடம் பெற்றுள்ளார்.  அதாவது ஒவ்வொரு படத்திற்க்கும் வித்தியாசமான கெட்டப்பில் படத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வார்.

அந்தப் படத்திற்காக 100%  என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்வார். அந்த அளவுக்கு சினிமாவில் அதிகப்பற்று கொண்டவர்.

இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக இவர் 20 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் உடல் தோற்றத்தையும் முழுமையாக மாற்றி உள்ளார்.

விஜய், விஷால் அரசியல் வருகை குறித்து கேள்வி..! ஒரே வார்த்தையில் வாய் மூட வைத்த ரஜினி..

மேலும் அதைத் தொடர்ந்து இவர்  தற்போது இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வி 62 வில்  கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தை HR நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு  இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு  சித்தார்த் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் திரைப்படமான சித்தா படத்தை இயக்கி இருந்தார். மேலும்  அது மட்டுமல்லாமல் இவர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த வி 62 அவருக்கு ஐந்தாவது திரைப்படமாக உருவாக உள்ளது.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.. வலிமை, லியோ, சந்திரமுகி, என சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த திரைப்படங்கள்..

இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு  வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிக்க கமிட்டாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் வில்லனாக நடிக்க கமிட்டாகி வருகிறார். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாவில் வில்லன்களில் நம்பர் 1 ஆக இருப்பது இவரே.

sj suriya 2
sj suriya 2