கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.. வலிமை, லியோ, சந்திரமுகி, என சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த திரைப்படங்கள்..

தமிழில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தனுசுடன் மாறி 2, என் ஜி கே, கார்கி  போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் கே 21 என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்து வருகிறார். இப்படி பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விஜய்தேவர் கொண்டா போன்ற பலருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை ரிஜெக்ட் செய்துள்ளாராம். அந்த லிஸ்ட் என்னவென்று பார்க்கலாம்.

கதிருக்கு திருமணத்தை செய்து வைத்து விட்டு வீட்டிற்கு வந்த கோமதி துருவி துருவி கேள்வி கேட்கும் பாண்டியன்.! விழி பிதுங்கி நிற்கும் மீனா..

வலிமை. அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் நடிகை ஹீமா குரோஷி நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில் சாய் பல்லவி தான் நடிப்பதாக இருந்ததாம்.  ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு இந்த படத்தில் பெரிய அளவில் சீன் இல்லை என முடிவு செய்து வேணாம் என மறுத்து விட்டாராம்.

டியர் காம்ரேட். விஜய் தேவர் கொண்டாவின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சாய் பல்லவி தானாம். ஆனால் இந்த படத்தில் லிப் லாக் சீன் இருந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

சந்திரமுகி 2. இந்த திரைப்படத்தில் நடிகை கங்கணா ரணாவத்  சந்திரமுகியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் முதலில்  நடிகை சாய் பல்லவி தான் நடிக்க இருந்ததாம். ஆனால் அவர் கதையைக் கேட்டு விட்டு பிடிக்காமல் ரிஜெக்ட் செய்து

சுருதி செய்த வேலையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த அண்ணாமலை.! காப்பாற்ற ஓடும் மீனா.. முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப துடிக்கும் ரோகினி …

போலோ சங்கர். அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேதாளம். இந்த திரைப்படம்  தெலுங்கு ரீமேக்கில் போலோ சங்கர் என வெளியானது. இந்த படத்தில் தமிழில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமிமேனன் நடித்திருந்தார் அதுபோல தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக சாய் பல்லவியை நடிக்க அழைத்தார்களாம். அவர் மறுத்து விட்டதால் அந்த கதாபாத்திரம் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு சென்றதாம்.

லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சாய் பல்லவியை  நடிக்க வைப்பதற்கு லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்துள்ளார். ஆனால் சாய் பல்லவி நடிக்க மறுத்ததால் பிறகு திரிஷாவை அணுகி உள்ளனர் என பேசப்படுகிறது.