சுருதி செய்த வேலையால் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த அண்ணாமலை.! காப்பாற்ற ஓடும் மீனா.. முத்து மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப துடிக்கும் ரோகினி …

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியல் முத்து ரோகிணி வாங்கிக் கொண்டு வந்த தோசையை சாப்பிட்டு விடுகிறார் உடனே ரோகிணி அது மனோஜ்க்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொண்டு வந்த சாப்பாடு எனக் கூறி பிரச்சனையை கிளப்பி விடுகிறார் ஆனால் முத்து என் வீட்டுல தான் சாப்பிடுறேன் வேற எங்கயும் சாப்பிடலையே டேபிளில் தோசை இருந்துச்சு அத தான சாப்பிட்டேன் என பேசுகிறார்.

உடனே ஆளாளுக்கு முத்துவை திட்ட உடனே மீனா அவர் நான் வாங்கிட்டு வந்ததுன்னு தெரியாம சாப்பிட்டாரு இத என் பெரிசு படுத்துறீங்க என்ன பேசுகிறார் உடனே அண்ணாமலை இடம் ரோகினி நீங்களே சொல்லுங்க மாமா நான் வாங்கிட்டு வந்தது சாப்பிட்டது தப்பு தானா என பேச அதற்கு அண்ணாமலை கூட்டுக் குடும்பத்தில் தனியா வாங்கிட்டு வர்றது தப்பு கிடையாது வாங்கிட்டு வந்தாலும் ரூம்ல கொண்ட கொடுக்க வேண்டியது தானே இப்படி ஹால்ல வச்சா யாரு வாங்கி வச்சிருக்காங்கன்னு தெரியும் அதனால தான் சாப்பிட்டான் அடுத்தவங்க பொருளுக்கு எப்பவுமே அவன் ஆசைப்பட மாட்டான் என புரிய வைக்கிறார்.

16 வயதினிலே, கரகாட்டக்காரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான்.! பல வருடம் கழித்து உண்மையை கூறி வருத்தப்படும் நடிகை…

ஆனால் விஜயா அவன் வேணும்னே தான் சாப்பிட்டு இருக்கான் என பேச இதெல்லாம் ஒரு பிரச்சனையா என அனைவரின் வாயை மூடுகிறார் அண்ணாமலை அடுத்த காட்சிகள் விஜயா மற்றும் விஜயாவின் தோழி இருவரும் ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிறார்கள் முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு துரத்த இருவரும் பிளான் பண்ணுகிறார்கள் ஆனால் அந்த ஹோட்டலில் மனோஜ் வேலை செய்கிறார்.

இதனால் ஆர்டர் எடுப்பவரிடம் நான் இந்த டேபிளில் பாக்கல நீங்க இதை பார்த்துக்கோங்க அடுத்த ரெண்டு டேபிள் நானே பாத்துக்குறேன் என டீலிங் பேசி வேறு ஒருவரை அனுப்புகிறார் மனோஜ். மனோஜ் அந்த டேபிள கவனி என ஓனர் கூறும் பொழுது விஜயா எவனோ மனோஜாம் இங்க வந்து ஹோட்டல்ல வேலை செய்றேன் என் புள்ள பெயரை வச்சிக்கிட்டு என் புள்ள பெயரை அசிங்கப்படுத்துறான் என பேசுகிறார்.

டி ஆர் பி இல் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட முக்கிய சீரியல்.! முந்தி கொண்டுவரும் சிறகடிக்க ஆசை.! இதோ டிஆர்பி முழு லிஸ்ட்..

அடுத்த காட்சியில் ரோகினி தன்னுடைய தோழியிடம் பணத்தை கொடுத்து அந்த ஆளுக்கு கொடுத்துடு அவன் வந்து வீட்ல உண்மைய சொன்னா எல்லாமே தெரிஞ்சிடும் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் முத்துவுக்கும் லேசாக டவுட் வந்துவிட்டது உடனடியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டிதானே அவரின் தோழி கூற எனக்கு கூட்டு குடும்பத்தில் இருப்பது தான் நல்லா இருக்கு தனியா இருந்து போர் அடிச்சிருச்சு என பேசுகிறார்.

ஆனா எப்படியாவது முத்துவையும் மீனையும் வெளியே அனுப்ப வேண்டும் என ரோகிணியும் திட்டம் போடுகிறார். மற்றொரு பக்கம் ஸ்ருதி டப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது டீ கொஞ்சம் கொடுக்க முடியுமா என மீனாவிடம் கேட்க டீ போட போகிறார் மீனா அந்த நேரத்தில் மஸ்கிட்டோ அதிகமாக இருப்பதால் ஸ்ப்ரே வாங்கி வீடு முழுவதும் அதிகமாக அடித்து விடுகிறார் அது மூச்சு முட்டுகிறது. மீனா போதும் போதும் என சொல்லியும் கேட்காமல் அதிகமாக அடித்து விடுகிறார்.

அடப்பாவிகளா எதிர்நீச்சலுக்கு இந்த நிலைமை.! அதிரடி மாற்றத்திற்கு காரணம் இந்த இரண்டு சீரியல் தானா.?

அந்த சமயத்தில்  ஸ்ருதிக்கு போன் வர டப்பிங் ஸ்டுடியோக்கு உடனே கிளம்பி போய் விடுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வருகிறார் என்ன ரூம் புல்லா ஏதும் ஸ்மெல் வருகிறது  எனக் கேட்க மீனா ஸ்ருதிதான் கொசுவுக்காக ஸ்பிரே அடித்து  விட்டார் அவ்வளவு சொல்லியும் நிறைய அடிச்சுட்டா என பேசுகிறார் உடனே நான் டீ போட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன் என மீனா உள்ளே போக அண்ணாமலை நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விடுகிறார்.

உடனடியாக மீனா முத்துவுக்கு போன் பண்ணா முத்து அட்டென்ட் பண்ணாமல் இருக்கிறார்  உடனே மீனா ஆட்டோவை பிடித்து அண்ணாமலையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல முயற்சி செய்கிறார் இத்துடன் என்ற எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்